பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி
டிச 22, 2025
Advertisement
இயக்குனராக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக அசத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ‛லவ் டுடே, டிராகன், டியூட்" என தொடர் வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே)" படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க தற்போது மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மீனாட்சி சவுத்ரி தமிழில் ‛கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட்" ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!