
உண்மை கதையில் விக்ரம் பிரபு
இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு, எல். கே.அக்ஷய் குமார் நடிக்கிறார்கள். நாயகியாக அனந்தா நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கூறும் போது "முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். முற்றிலும் புதிய களத்தில் புதிய கதையாக இந்த படம் அமையும். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுக்கும்" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!