
ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ்
இந்த நிலையில் ஜப்பானில் இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக நேரிலேயே ஜப்பான் சென்று அங்குள்ள ரசிகர்களுடன் இதன் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் பிரபாஸ். அங்கு அவர் பேசும்போது, “ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே பலர் என்னிடம் சொன்னார்கள். அதை நேரில் பார்க்கும் கனவு இன்று எனக்கு நனவாகியுள்ளது. நானும் இனி வருடம் தோறும் ஜப்பானுக்கு வந்து உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!