
தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை
படத்தின் அறிமுக விழாவில் நாயகி சுபஸ்ரீ பேசும்போது "விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்பாதர். எனக்கு மட்டுமல்ல எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்தான் காட்பாதர்" என்றார்.
இன்னொரு நாயகியான ரசியா பேசும்போது, " நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து தமிழுக்கு வரும் முதல் நடிகை தான்தான் என்று நினைக்கிறேன். பள்ளி காலத்தில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. இதற்காக நடனம், நடிப்பு கற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!