
தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர்
சென்னையில் நடந்த இந்த பட பாடல் விழாவில் விஜய் சேதுபதி, இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கவினுக்கு ஜோடி ஆண்ட்ரியா கிடையாது, அவர் ட்ராக் தனி என்பது குறிப்பிடப்பட்டது. கவின் நடிக்கும் படம் என்பதால் அவர் நண்பரான இயக்குனர் நெல்சன் படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‛ஆண்ட்ரியா மெரினா பீச்சில் உள்ள சிலை மாதிரி இருக்கிறார். அவரை நானும் ரசித்தேன் என் மகனும் ரசிப்பான். வீட்டிற்கு போய் அவர் பெட்டில் தூங்குவது இல்லை. பிரிட்ஜில் அமர்ந்து கொள்கிறார் போல, அவ்ளோ பிரஷ்ஷாக இருக்கிறார்" என புகழ்ந்து பேசினார். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை, கஷ்டம், பணத்திருட்டும் கதையில் முக்கியமான விஷயங்களாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!