
ரஜினிகாந்த்தை தலைவர் எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன்
தற்போது 44 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். கமல்ஹாசன் தயாரிக்க, சுந்தர் சி இயக்க, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அப்படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் பகிர்ந்த போது "தலைவர் 173" என ரஜினி ரசிகர்கள் குறிப்பிடுவதைப் போலக் குறிப்பிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்திற்கு மேலாகவும் ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!