
விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன்
சென்னையில் நடைபெற்ற ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருணாகரன் கூறுகையில், "என்னுடைய முதல் படம் "கலகலப்பு". அதன் பின் "பீட்சா", "ஜிகர்தண்டா", "யாமிருக்க பயமே" என்று தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். சில படங்கள் சரியாக வரவேற்பு கிடைக்காத போது சினிமாவை விட்டு போகலாம் என பலமுறை முடிவு எடுத்திருக்கிறேன். அப்போது விஷ்ணு தான் என்னைப் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் அப்படி சென்றுவிடக் கூடாது என கூறி, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்புகள் கொடுத்து மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அது இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு கண்டிப்பாக நன்றாக ஓடும்" என தெரிவித்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!