
ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம்
ஒவ்வொரு படம் வெளியான பிறகு அடுத்த படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி இமயமலைக்கு ஆன்மிக பயணம் செய்வது வழக்கம். உடல்நலக்குறைவாக இருந்த காலத்தில் மட்டும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை.
"வேட்டையன்" படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். "கூலி" படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.
இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி நாளை இமயமலை சென்று பாபாவை தரிசித்து விட்டு திரும்புகிறார்.
முன்னதாக இன்று அவர் பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் அவரது நண்பர்களும் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!