
கதை நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கும் “டாஸ்”
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ""மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும், கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் கிரைம் திரில்லர் படம் டாஸ். யாஷிகாவுடன், தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜாஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ்"" என்கிறார்.
ஒரு கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு மாமல்லபுரத்தில் நடந்த விபத்து, தோழி உயிரிழப்பு காரணமாக மார்க்கெட் டல் ஆனது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!