
‛வீரம் குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட்
அரண்மனை, கத்தி உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது ரைட் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் நடிப்பு அழுத்தமாக இருக்கும். அவர் நடிப்பை பார்த்தால் அழுகை வந்துவிடும் என்று படத்தில் நடித்த நட்டியும் கூறியுள்ளார். சுப்ரமணியன் ரமேஷ் குமார் படத்தை இயக்கியுள்ளார். ஒரு போலீஸ் ஸ்டேஷனை அடையாளம் தெரியாதவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர என்ன நடக்கிறது என்பது கதை.
‛‛நான் அஜித்துடன் நடித்த படம் வீரம். அதில் இருந்து பிரபலம் ஆனேன். ரஜினி சாருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பிற்காலத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நான் அஜித்துடன் அப்படி நடிக்க வாய்ப்பில்லை. இப்போது காலம் மாறிவிட்டது"" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!