
புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள்
அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன் நடித்து நேற்று வெளியான "தண்டகாரண்யம்" படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த இரண்டு பழைய பாடல்களைப் படத்தில் பயன்டுத்தியுள்ளார்கள்.
கலையரசன், வின்சு சாம் இடையிலான காதல் காட்சியில் 1989ல் வெளிவந்த "இதயத்தை திருடாதே" படத்தில் இடம் பெற்ற "ஓ ப்ரியா ப்ரியா" பாடலையும், பின்னர் ஒரு முக்கியமான காட்சியில், "கண் சிவந்தால் மண் சிவக்கும்" படத்தில் இடம் பெற்ற "மனிதா மனிதா" பாடலையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
தினேஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "லப்பர் பந்து" படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த "பொன்மனச் செல்வன்" படத்தில் இடம் பெற்ற "நீ பொட்டு வச்ச தங்க குடம்" பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல்தான் அப்படத்திற்கே ஒரு அடையாளத்தைத் தந்து பெரும் வெற்றியைப் பெற வைத்தது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!