இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன்
ஆக 20, 2025
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். அடுத்து அவர் இயக்கிய மாமன்னன் படத்தில் கீர்த்திசுரேஷ் ஹீரோயின். ஆனால், இந்த படங்களில் முதலில் நடிக்க இருந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தானாம். அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இதை அனுபமாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இப்போது விக்ரம் மகன் துருவ்வை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛பைசன்" படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் ஹீரோயின். இதில் அவர் தென் மாவட்டத்து பெண்ணாக நடிப்பதாக தகவல். முதல் 2 படங்களில் வாய்ப்பை தவறவிட்ட அனுபமா 3வது படத்தில் பிடித்து இருக்கிறார். இதற்குமுன்பு தனுசுடன் கொடி, பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!