
ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா?
இது குறித்து அவரிடம் கேட்டால் ""ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார். "" என்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!