பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம்
ஜூலை 05, 2025
Advertisement
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் டப்பிங் தொழில்நுட்பம் வந்த பிறகு ஏராளமான தெலுங்கு, கன்னட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை மலையாள படங்கள் நேரடியாக தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சில படங்கள் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி வெளியாகி இருக்கிறது. ஆனால் முதன் முதலாக டப் செய்யப்பட்டு வெளியான முதல் மலையாளப் படம் "சேச்சி".
இந்த படம் தமிழில் "நடிகை" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசை குருவான ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார். டி.ஜானகி ராமன் இயக்கிய இந்த படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ்.குமாரி, ஆரன்முள பொன்னம்மா, எஸ்.பி.பிள்ளை உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
கொச்சின் பிரதர்ஸ் சார்பில் சுவாமி நாராயணன் தயாரித்திருந்தார். 1950ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் அடுத்த ஆண்டு தமிழில் வெளியானது. ஒரு சாதாரண நடுத்தர கும்பத்து பெண் நடிகை ஆவதுதான் படத்தின் கதை.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!