கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை
ஜூலை 05, 2025
Advertisement
நடிகை கவுதமி 2023 செப்டம்பர் 11ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், "எனது 4 வயது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துகளையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை நான் பவர் ஏஜென்டாக நியமித்தேன். ஆனால் அவர் எனது பல சொத்துக்களை விற்று 11 கோடி ரூபாய் வரை என்னை ஏமாற்றி விட்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கவுதமி புகார் மனுவில் கூறியுள்ள அனைத்தும் உண்மை என்று கண்டுபிடித்தனர். அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பலராமன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்து இருந்தது உறுதியானதால், மத்திய குற்றப்பிரிவில் இருந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதன்படி நடிகை கவுதமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கவுதமி நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அழகப்பனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு. உங்கள் சொத்துகளை கவனிக்க அழகப்பனை ஏன் பவர் ஏஜென்டாக நியமித்தீர்கள், சொத்துக்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது? என 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு கவுதமி அளித்த பதிலை அமலாக்கத்துறை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். 7 மணி நேரம் நீடித்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!