
விறுவிறுப்பாக நடந்து வரும் கூலி வியாபாரம்
கிடைத்த தகவலின்படி தமிழ் சினிமாவில் இதுவரையில் நடக்காத அளவிற்கு இந்தப் படத்திற்கான வியாபாரம் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்தமாக சுமார் 500 கோடி வரை வியாபரம் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வியாபாரம் என்றாலே அதில் அதிகபட்ச வியாபாரம் என்பதை ஆரம்பித்து உயர்த்தியவர் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறையாக இணைந்த அறிவிப்பு வந்தபோதே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.
கமல்ஹாசனுடன் இணைந்து "விக்ரம்" படத்தைத் தந்த போது கமலுக்கு அதிகமான வசூல் படமாக அந்தப் படம் அமைந்தது. அது போல ரஜினி படங்களுக்கான அதிகமான வசூலை இந்தப் படத்தில் லோகேஷ் அமைத்துத் தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!