
பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம்
கே.ரங்கராஜ் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா, சுரேஷ், ரேவதி, மோகன் நடித்தார்கள். இளையராஜா இசையமைத்தார். மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்தார்.
படத்தின் நாயகன் சிவகுமார் மனைவி சுஜாதா மீது அதிகமாக சந்தேகப்படுவார். இந்த சந்தேக புத்தியால் பாதிக்கப்படும் சுஜாதா வீட்டை விட்டு ஓடி விடுவார். 20 வருடங்களுக்கு பிறகு சிவகுமார் மனைவியை மீண்டும் சந்திக்கிறார். அப்போது அவருக்கு திருமணமாகி ரேவதி மகளாக இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் "சிந்தூர்" என்ற பெயரில் ரீமேக் ஆனது. சிவகுமார் நடித்த கேரக்டரில் சசிகபூர் நடித்தார், சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். தெலுங்கில் "சுமங்கலி" என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!