
கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி
கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், ""புதிய தமிழ் படங்களுக்கு தற்போதுள்ள 8 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய தமிழ் படங்களுக்கு தற்போதுள்ள 7 சதவீத வரி, 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கும் முன்னெடுத்த கமலுக்கும் நன்றி,"" என்றார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான காலக்கட்டத்தில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அலைபேசி வாயிலாக செயலிகளில் படங்களை காணப் பழகி வரும் ரசிகர்களை தியேட்டர் நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல முகாந்திரமாகவும் அமையும்" என்றார். மேலும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினரும் மற்ற திரைத்துறையினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!