
ரிலீஸ் தேதியை நான் சொல்றேன் : கூலி துவங்கும்போதே லோகேஷ் போட்ட கண்டிஷன்
அதாவது இதற்கு முன்பு வெளியான லோகேஷின் கைதி மற்றும் லியோ உள்ளிட்ட படங்களுக்கு ரிலீஸ் தேதி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு நடத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் திட்டமிட்டபடி சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியை மனதில் கொண்டு கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டிய நிர்பந்தம் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்பட்டது. குறிப்பாக லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திய இருக்கலாம் என்று கூட படம் வெளியான பிறகு விமர்சனங்கள் இருந்தன.
இந்த நிலையில் கூலி படம் துவங்குவதாக முடிவு செய்யப்பட்டதுமே இதுபோன்று ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனத்திடம் படம் தயாரான பிறகு நானே சொல்கிறேன் அதன்பிறகு ரிலீஸ் தேதியை அறிவியுங்கள் என்பதை ஒரு நிபந்தனையாகவே கூறிவிட்டேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்பிறகு படம் முடிந்து அதை எடிட்டிங் செய்து பார்த்து திருப்தி வந்த பின்னரே ரிலீஸ் தேதி அறிவிக்க கிரீன் சிக்னல் காட்டினாராம் லோகேஷ் கனகராஜ்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!