
பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் விரைவில் ஆரம்பம்
பிரபாஸ் தற்போது "தி ராஜா சாப், பாஜி" ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். "தி ராஜா சாப்" படத்தை மாருதி இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். "பாஜி" படத்தை ஹனு ராகவுப்படி இயக்கி வருகிறார். இப்படத்தில் இமான்வி, ஜெயப்பிரதா, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவற்றை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் "ஸ்பிரிட்" படத்தில் நடிக்க உள்ளார் பிரபாஸ். நாயகியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என படத்தின் தயாரிப்பாளர் பூஷன்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இவற்றோடு "சலார் 2, கல்கி 2898 பாகம் 2" ஆகிய படங்களிலும் பிரபாஸ் நடிக்க வேண்டியுள்ளது. "சலார் 2"க்கு முன்பாக "கல்கி 2" படத்தில் அவர் நடிக்கலாம். அடுத்த சில வருடங்களுக்கு பிரபாஸ் ரொம்பபே பிஸி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!