
அஷ்வத் மாரிமுத்துவை அட்வான்ஸ் ஆக நம்பிய சிம்பு
அறிமுகமாகும் இயக்குனர்கள் பலருக்கும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். ஆனால், அப்படியான வாய்ப்பு எளிதில் கிடைத்து விடுவதில்லை. இருந்தாலும் சில திறமையாளர்களுக்கு மட்டுமே அப்படியான வாய்ப்பு அமைந்து விடுகிறது.
"டிராகன்" இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு அப்படியான அட்வான்ஸ் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சிலம்பரசன். "டிராகன்" படம் வெளிவருவதற்கு முன்பே அஷ்வத்தின் திறமையை அறிந்து தனது 51வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். சிம்பு நம்பியதைப் போலவே "டிராகன்" படமும் பெரும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதனால், சிம்பு - அஷ்வத் மாரிமுத்து இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. "ஓ மை கடவுளே, டிராகன்" என அடுத்து சிம்புவின் 51வது படத்தையும் வெற்றிகரமாகக் கொடுத்து அஷ்வத் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!