தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன?
மார் 04, 2025
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் " தேரே இஸ்க் மெயின்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்தும் வந்தார் தனுஷ். மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வந்தார். இவற்றில் இட்லி கடை படம் ஏப்., 10ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். அதேசமயம் படம் தள்ளிப்போகலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.
இந்த நிலையில் இட்லி கடை படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதனை பாங்காக்கில் படமாக்கவுள்ளனர். அது முடிந்த பின்னர் தான் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு உறுதியாக தெரியும். மேலும் குபேரா படத்தில் இன்னும் ஒருவார படப்பிடிப்புகள் மீதமுள்ளது என்கிறார்கள். இவை அனைத்தும் தேரே இஸ்க் மெயின் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு தான் தொடங்கும் என கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!