
தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன்
இந்த நிகழ்ச்சியில் கமல், த்ரிஷா இணைந்து கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அப்போது “தக் லைப் படத்தில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா?” என்று கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் திரும்ப மணிரத்னம் சாரை சந்திக்க வேண்டாமா? என்ன சார் கஷ்டப்பட்டு எடிட் எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறேன். எடிட்டே இல்லாமல் மொத்த கதையையும் தட்டிவிட்டீர்களே என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும். அந்தப் படம் பார்த்தீர்கள் என்றாலும் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது. அவர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர் தான்” என்று அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!