
ஏப்ரல் வரை தமிழ் சினிமா காத்திருக்க வேண்டுமா?
விஷால் நடித்து வெளிவந்த "மத கஜ ராஜா", மணிகண்டன் நடித்து வெளிவந்த "குடும்பஸ்தன்" ஆகிய படங்கள் முறையே 50 கோடி மற்றும் 25 கோடி வசூலித்துள்ளன. அந்த இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன.
இருந்தாலும் 36 படங்களில் ஒரு படம் கூட பெரிய வெற்றி, வசூலைக் குவிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2024ம் வருடம் மே மாதம் வெளிவந்த "அரண்மனை 4" படம்தான் முதல் பெரிய வெற்றியாக அமைந்தது.
கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தாமதமாகத்தான் பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10ம் தேதி தனுஷ் இயக்கம் நடிப்பில் "இட்லி கடை", அஜித் நடிப்பில் "குட் பேட் அக்லி" ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்கள்தான் பெரிய வசூலை ஆரம்பித்து வைக்கும் என கோலிவுட்டில் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்கட்டும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!