
அடிதடி, ரவுடித்தனத்தை விட்டுறேன்... இனி காதல் மட்டும் தான் : சூர்யாவின் ‛ரெட்ரோ
இந்த படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். தற்காலிகமாக சூர்யா 44 என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் இன்று(டிச., 25) கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்த படத்திற்கு "ரெட்ரோ" என தலைப்பு வைத்துள்ளதாக அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
2:15 நிமிடம் ஓடும் இந்த அறிமுக வீடியோவில் குளக்கரையில் சூர்யாவின் கைகளில் காப்பு உடன் கயிறு போன்ற ஒன்றை அணிவிக்கிறார் பூஜா ஹெக்டே. அவரிடத்தில், ‛‛கோபத்தை கம்மி பண்ணுகிறேன், என் அப்பா உடன் வேலை பார்ப்பதை விடுறேன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசத்தை விட்டுறேன், சிரிக்க, சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன், இனி காதல், பரிசுத்த காதல் மட்டும் தான்... கட் அண்ட் ரைட்டாக சொல்றேன்... இப்ப நீ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா டி..."" என சூர்யா தெரிவிக்கிறார்.
இதை வைத்து பார்க்கையில் அப்பா உடன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்யும் சூர்யா, பூஜா ஹெக்டேவிற்காக அதையெல்லாம் விட்டுவிட்டு காதலில் இறங்கும் கதையாக இருக்கும் என தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!