
படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறினால் பாதி கட்டணம் திருப்பித் தரப்படும்: புதிய திட்டம் அறிமுகம்
ஒரு ரசிகர் 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால், அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும். 25 முதல் 50 சதவீதம் படம் மீதி இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பி தரப்படும். 50 சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவீதம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் கூறியிருப்பதாவது: டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள், வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும். ஏஐ கேமரா மூலம் தியேட்டரில் இருப்போர் கண்காணிக்கப்படுவார்கள். ரசிகர்கள் புக் செய்யும் டிக்கெட், அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார்? ஒருவர் எப்போது உள்ளே வருகிறார், எப்போது வெளியே செல்கிறார் என்று அனைத்தையும் கண்காணிப்போம். ரசிகர்கள் எப்போது வெளியேறுகிறார்கள் என்பதை வைத்து, அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும். அதன்பிறகு திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை அவர்களுக்கு ஆன்லைன் மூலமே அனுப்பி வைக்கப்படும். என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 19 சதவீதமும், கொரோனா பரவலுக்குப் பிறகு 25 சதவீதமும் குறைந்துவிட்டது. அதோடு கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில், தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. அதனால் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!