ஆக. 2ல் வெளியாகும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படம்
ஜூலை 11, 2024
Advertisement
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த், முதல் முறையாக இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு". குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார் .
ஏற்கனவே இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!