
இந்தியன் 2வில் ரஜினி குறித்து விமர்சனமா? - கமல் பதில்
இதுகுறித்து மும்பையில் நடந்த புரமோசன் நிகழ்வொன்றில் கமல் கூறும்போது, “எனக்கும் ரஜினிக்கும் இருக்கும் தொடர்பு புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிறைய படங்களில் நடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மற்ற போட்டியாளர்கள் போல் நாங்கள் அல்ல. எங்கள் இருவருக்குமே ஒருவர்தான் குரு. எனக்கும், ரஜினிக்கும் இடையே பிற நடிகர்களைப் போல் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்களுக்குள் பொறாமை கிடையாது.
எங்கள் இருவருடைய பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகும்"" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!