வா வாத்தியாரே... - கார்த்தி பட டைட்டில் உறுதியானது
Advertisement
Advertisement
வா வாத்தியாரே... - கார்த்தி பட டைட்டில் உறுதியானது
மார் 24, 2024
அ நிறம் | அளவு
Advertisement
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 26வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் வா வாத்தியாரே என்று கூறப்பட்டாலும், இதுவரை படக்குழு அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் கார்த்தி 26வது படத்தின் டைட்டில் ‛வா வாத்தியாரே" என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், வா வாத்தியாரே படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!