
விஜய்யின் ‛தி கோட் ஆகஸ்ட் 23ல் திரைக்கு வருகிறது
இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் அடுத்தபடியாக ரஷ்யா சென்று சில பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. இன்னொரு பக்கம் கோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் நடைபெற்று வருகிறது.
கோட் படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ல் திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஆகஸ்ட் 23ம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!