
புட்பால் கேக் வெட்டி மகன் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் எளிமையாக கொண்டாடினார். மகன் கால்பந்து வீரர் என்பதால் முன்னணி கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, டேவிட் பெக்காம் பேனர் வைத்து புட்பால் வடிவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஃபுட் பால் ஜெர்சி அணிந்தே கேக் வெட்டினார் ஆத்விக். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!