
பரோட்டா சூரி டூ பட விழாக்களின் சூரி
கடந்த மாதக் கடைசியில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த "விடுதலை, ஏழு கடல் ஏழு மலை" ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அதற்காக அப்படக் குழுவினருடன் அந்தத் திரைப்பட விழாவில் சூரி கலந்து கொண்டார்.
அடுத்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்துள்ள "கொட்டுக்காளி" படம் திரையிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 முதல் 25 வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 16ம் தேதி இப்படம் அங்கு திரையிடப்பட்டது. அடுத்து பிப்ரவரி 18, 19, 20, 25 ஆகிய நாட்களிலும் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன.
இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து சூரி, “உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும், தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!