
தமிழ், ஹிந்தியில் உருவாகும் போர்
இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஹிந்திப் பதிப்பில் ஹர்ஷவர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தியில் டாங்கே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு விதமான குணாதிசயங்களை கொண்ட இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை எப்படி அமைத்துக் கொள்கிறார்கள். இதில் அவர்கள் கற்றது என்ன? பெற்றது என்ன என்பதுதான் படத்தின் கதை.
டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா மற்றும் கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜிம்ஸி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!