
“நீங்கதான் தலைவர் - ரஜினிக்கு அமிதாப்பச்சன் பதில்
அதற்கு நேற்றிரவு பதிலளித்த அமிதாப்பச்சன், “ரஜினிகாந்த் சார்… எனக்கு நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர், ஆனால், படத்தின் தலைப்பைப் பாருங்கள்... அது "தலைவர் 170". தலைவர் என்றால் லீடர், ஹெட், சீப். நீங்கள்தான் தலைவர், லீடர், சீப். அதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே ?. என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுடன் மீண்டும் வேலை செய்வது எனக்குப் பெருமை,” என பதிவையும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, “மீண்டும் சிறந்த தலைவருடன்.. த லீடர், ஹெட், சீப் ரஜினிகாந்த்துடன் அவரது 170வது படத்தில். 33 ஆண்டுகளுக்குப் பிறகு… என்ன ஒரு மரியாதை, பெரிய பாக்கியம்… நீங்கள் இன்னும் துளி கூட மாறவில்லை. இன்னும் மிகச் சிறந்தவர்தான், தலைவர் 170,” என மற்றொரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.
அவரது இரு பதிவுளுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் இருவரும் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!