
இசையில் இணையும் தந்தை, மகள்
இந்த இசை ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஸ்ருதி பாடல் எழுதி, இசை அமைத்து, பாடி நடிக்கிறார். அவருடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். சிறப்பு தோற்றமாக கமல்ஹாசனும் பாடி, ஆடுகிறார்.
தற்போது இசை ஆல்பத்துக்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த இசை ஆல்பம் வெளியிடப்படுகிறது. கமல்ஹாசன்- ஸ்ருதிஹாசன் இணையும் இசை ஆல்பம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கமலின் நடிப்பில் வெளியான ‛உன்னைப் போல் ஒருவன்" படத்திற்கு ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!