
விஜய் ஒரு அற்புதமான மனிதர் - ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித்
அதில், ‛‛லியோ நான் நடித்துள்ள முதல் தமிழ் படம். இந்த படத்தின் படப்பிடிப்பில் மூன்று நாட்கள் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் நான் நடித்த அனைத்து காட்சிகளும் விஜய்யோடு தான் படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் ஒரு அற்புதமான மனிதர். அவரது அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. விஜய்யுடன் நான் நடித்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் இருந்தது. அதேபோல் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சிகளையும் மிகத் தெளிவாக படமாக்குகிறார். அவரது திட்டமிடல் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்பினேசனில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று எனது மேனேஜர் என்னிடம் கேட்டபோது, மறு பரிசீலினை இன்றி ஓகே சொல்லி நடித்தேன் என்று கூறியிருக்கிறார் டென்சில் ஸ்மித்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!