
100 மில்லியன் - விஜய் சாதனையை சமன் செய்த தனுஷ்
அவர் நடித்து வெளிவந்த, "மாரி 2 - ரவுடி பேபி" பாடல் 1400 மில்லியன்களைக் கடந்து யூடியூப் தளத்தில் முதலிடத்தில் உள்ள தமிழ் சினிமா பாடலாக உள்ளது. அதற்கடுத்து "3 - ஒய் திஸ் கொலவெறிடி" பாடல் 415 மில்லியன் பார்வைகளுடனும், "மாரி - டானு டானு" பாடல் 220 மில்லியன்களுடனும், "எனை நோக்கி பாயும் தோட்டா - மறு வார்த்தை பேசாதே" பாடல் 153 மில்லியன்களுடனும், "திருச்சிற்றம்பலம் - தாய் கெழவி" பாடல் 145 மில்லியன்களுடனும், "மாரி - தர லோக்கல்" பாடல் 130 மில்லியன்களுடனும், "திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காதா…" பாடல் 124 மில்லியன்களுடனும், "வேலையில்லா பட்டதாரி - ஊதுங்கடா சங்கு" பாடல் 115 மில்லியன் பார்வைகளுடனும், "பட்டாஸ் - சில் ப்ரோ" பாடல் 108 மில்லியன்களுடனும், "ஜகமே தந்திரம் - புஜ்ஜி.." பாடல் 102 மில்லியன்களுடனும், தனுஷின் 100 மில்லியன் கிளப் பாடல்களாக உள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை 55 பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அவற்றில் தலா 11 பாடல்களை தங்கள் வசம் வைத்துள்ளனர் விஜய், தனுஷ். இந்தப் பட்டியல் இத்துடன் நிற்காது, இன்னும் அதிகரிக்கலாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!