
விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்
அஜித்தும் பைக்கில் உலக டூர் என அடிக்கடி கிளம்பிவிடுவதால் படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்று நடைபெற்ற "சந்திரமுகி 2" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நேற்று பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். "விடாமுயற்சி" படம் தங்களுக்கு முக்கியமான படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கதைத் திருட்டு சிக்கல் என பட வெளியீட்டின் போது எதுவும் வந்துவிடாமல் இருக்க சில வெளிநாட்டுத் திரைப்படங்களின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!