
ரிஷிகேஷ் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ரஜினி
இந்த பயணத்தின் முதல்நாளில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் சென்றார் ரஜினி. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள துறவிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். அவர்களின் சொற்பொழிவையும் கேட்டு மகிழ்ந்தார். அவரும் சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் அவர்களுக்கு உணவு அளித்தார். ரிஷிகேஷில் உள்ள சில கோயில்களுக்கும் சென்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!