
ஜெயிலர் முதல் நாள் வசூல் : முதல் கட்டத் தகவல்
இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2 கோடி, அமெரிக்காவில் 12 கோடி, இதர வெளிநாடுகளில் 20 கோடி என மொத்தமாக உலக அளவில் 89 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த படத்திற்கு அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருவேளை அந்தக்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநிலங்களில் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பு கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்குப் படம் மிகவும் பிடித்திருந்தாலும், நடுநிலை ரசிகர்களுக்கு இடைவேளைக்குப் பின் படம் தடுமாறுகிறது என்ற கருத்து அதிகம் வெளியாகி உள்ளது.
இந்த வார இறுதிவரை படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்துள்ளதால் 200 கோடி வசூலை நான்கு நாட்களில் கடக்க வாய்ப்புள்ளது என்று தகவல்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!