
‛வேட்டை மன்னன் மீண்டும் தொடங்குகிறதா?
இப்போது ரஜினியை வைத்து "ஜெயிலர்" படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து நேற்று இரவில் இருந்து ‛வேட்டை மன்னன்" படத்தை சிம்புவை வைத்து நெல்சன் தொடங்க உள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், வேட்டை மன்னன் பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய "பீஸ்ட்" படம் வெளியாகுவதற்கு முன்பும் இதேபோல் வேட்டை மன்னன் படம் தொடங்குவதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!