
கல்கி 2898 ஏ.டி ரிலீஸ் தேதி மாற்றமா?
ஏற்கனவே இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அறிமுக வீடியோவிலும் 2024 ரிலீஸ் என குறிப்பிட்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70% சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதால் ஜனவரியில் படத்தை வெளியிடுவது சிரமம் என்கிறார்கள். இதனால் இப்படத்தின் வெளியீட்டை 2024, மே மாதம் 9ம் தேதிக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!