
யோகி பாபு உடன் இணைந்த வாணி போஜன்
ஜூலை 15, 2023
Advertisement
அபியும் நானும், மொழி, பயணம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொம்மை திரைப்படம் தோல்வியை அடைந்தது. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். தற்போது அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் யோகி பாபு, வாணி போஜன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு சட்னி சாம்பார் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று(ஜூலை 15) நடைபெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படம் நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!