
ரஜினிக்காக அரை மணி நேரத்தில் பாடல் எழுதிய அருண்ராஜா காமராஜ்
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்த ஜெயிலர் படத்தில் நடனம் சார்ந்த ஒரு சூழலுக்கு பாடல் எழுத வேண்டும் என்று என்னை அழைத்த இசையமைப்பாளர் அனிருத், தெலுங்கு வார்த்தைகளும் கலந்து எழுத வேண்டும் என்று கூறினார். அதனால் இந்த பாடலில் ஆங்காங்கே தெலுங்கு வார்த்தைகளையும் கலந்து அரை மணி நேரத்தில் எழுதி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. பாடல் சிறப்பாக உள்ளது, கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னார் அனிருத். அவர் சொன்னது போலவே தற்போது காவாலா பாடல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நான் எழுதிய நெருப்புடா பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவரது காலா படத்திலும் பாடல் எழுதினேன். இப்போது ஜெயிலர் படத்திலும் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் அருண் ராஜா காமராஜ்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!