
லியோ வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ?
தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத அளவிற்கு ஒரு பெரும் வியாபாரம் அப்படத்திற்கு நடந்துள்ளதாக பரப்பி வருகிறார்கள். இதுவரையில் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்திற்கான கேரள வினியோக உரிமையும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு உரிமைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக வெளியீட்டு உரிமை அல்லது ஏரியா வாரியாக விற்கப்படும் உரிமை ஆகியவைதான் முக்கியமானவை. இவற்றை அதிக விலைக்கு விற்கவே மற்ற உரிமைகளைப் பற்றிய தகவல்களைப் பரப்புகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே, விஜய் அவருடைய அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவலைப் பரப்பினார்கள். இப்போது "லியோ" உரிமை பற்றிய தகவல் பரப்பப்டுகிறது. இந்த வருடத்தின் அதிக வியாபாரமாக "லியோ" படம்தான் இருக்கும். அதற்குப் பிறகே ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்" படம் இருக்கும் என ரஜினி ரசிகர்களையும் வம்புக்கிழுக்கிறது அந்த "லியோ" குரூப்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!