
மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா
ஜூன் 02, 2023
Advertisement
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படம் தோல்வி அடைந்தது. வெங்கட்பிரபு அடுத்து விஜய்யின் 68வது படத்தை இயக்க போகிறார். இந்நிலையில் நாகசைதன்யாவும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மாண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க போகிறார். முதல் முறையாக இந்த படத்தில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதற்காக மீனவர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து வருகின்றனர் படக்குழுவினர்கள். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!