
ஆதி புருஷ் - ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியீடு
அஜய் - அதுல் இசையமைப்பில் உருவாகியுள்ள அப்பாடலை முரளிதரன் எழுதியிருக்கிறார். பாடலை ஆண் பாடகர்கள் சிலரும், பெண் பாடகர்கள் சிலரும் குழுவாகப் பாடியிருக்கிறார்கள்.
காட்டில் ராமன், லட்சுமணன் ஆகியோர் அனுமன் மற்ற வானரக் கூட்டங்களுடன் நடந்து செல்ல, ராமன் வருகைக்காக, இலங்கையில் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா காத்திருக்கும் காட்சிகள் அப்பாடலில் இடம் பெற்றுள்ளது. பாடலில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் நல்ல தரத்தில் அமைந்துள்ளது.
ஜுன் மாதம் 16ம் தேதி "ஆதி புருஷ்" உலகம் முழுவதும் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!