
நேபாளம், பூடான் பயணம் நிறைவு : அஜித்தின் அடுத்த உலகம் சுற்று பயணம் நவம்பரில் துவங்குகிறது
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிரமான வானிலையை எதிர்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ளார். நேபாளம், பூடான் நாட்டையும் கடந்து சென்றார். அவரது உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்திற்குள் அஜித்குமார் முடித்து விடுவார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!