
இந்தியன் 2 தீபாவளிக்கு வெளியிட திட்டம்
"இந்தியன் 2" படக்குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் முடிவடைய இருக்கிறதாம். அதன்பின் இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், விஎப்எக்ஸ் வேலைகள் முடிவடைய வேண்டும். "இந்தியன் 2" படத்தை முழுவதுமாக முடித்த பிறகுதான் "கேம் சேஞ்சர்" படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு ஷங்கர் செல்ல உள்ளாராம். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்கிறார்கள். இரண்டு படத்துக்குமே பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதனால் தரத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என ஷங்கர் நினைக்கிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!