
நடிகர் பாலாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சிவா இயக்கி அஜித் நடித்து வெளிவந்த "வீரம்" படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் பாலா. சிவா இயக்கிய "அண்ணாத்த" படத்திலும் நடித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு சிறுநீரகப் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் பாலா. அவரை சந்திக்க இயக்குனர் சிவா இன்று கொச்சி சென்றுள்ளதாகத் தெரிகிறது.
2010ல் பின்னணிப் பாடகி அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாலா. பின்னர் இருவரும் 2019ல் விவாகரத்து செய்து கொண்டனர். 2021ல் எலிசெபத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் பாலா.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!